Download Free Audio of 16 ராபர்ட் கியோஸாகி... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

16 ராபர்ட் கியோஸாகி “நல்லது” என்றபடி நான் மெதுவாகச் சொன்னேன், “நான் பள்ளியில் சலிப்பாக உணர்கிறேன். நாம் பள்ளியில் படிப்பதற்கும் யதார்த்த உலகுக்கும் இடையில் எந்தச் சம்பந்தத்தையும் நான் காணவில்லை. நான் பணக்காரனாய் இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஓர் இறந்த தவளை, நான் ஒரு புதிய காரை வாங்குவதற்கு எப்படி உதவப் போகிறது? ஆசிரியர் மட்டும் ஓர் இறந்த தவளை எப்படி என்னைப் பணக்காரனாக்கப் போகிறது ஆயிரம் தவளைகளைக் என்பதைச் சொன்னால், நான் கூறுபோடுவேன்." பணக்கார அப்பா சத்தமாகச் சிரித்துவிட்டுக் கேட்டார், "பணத்துக்கும் இறந்த தவளைகளுக்கும் இடையிலான தொடர்பைப்பற்றி நீ கேட்கும்பொழுது அவர்கள் என்ன சொல்கிறார்கள்?" "எல்லா ஆசிரியர்களும் ஒரே விஷயத்தைத் தான் சொல்கிறார்கள், யதார்த்த உலகத்தோடு பள்ளி எப்படி பொருத்தமுடையதாய் இருக்கிறது என நான் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் ஒரு விஷயத்தைத் தான் சொல்கிறார்கள்" என்றேன் நான். "அப்படி அவர்கள் என்னதான் சொல்கிறார்கள்?" " 'நீ நல்ல மதிப்பெண் வாங்க வேண்டியது முக்கியம். அப்போதுதான் உன்னால் பாதுகாப்பான நிரந்தரமான வேலை பெற முடியும்' என அவர்கள் சொல்கிறார்கள்," என்றேன் நான். "நல்லது, அதைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்" என்று கூறிய அவர், தொடர்ந்து "வேலைக்குச் செல்வதற்காகவும் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகவும்தான் நிறைய பள்ளிக்கூடத்துப் போறாங்க," என்றார் அவர். பேர் என்னால் என்று "ஆனால் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. யாரோ ஒருவருக்காகப் வேலை செய்ய நான் விரும்பவில்லை. எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், நான் எப்போது வேலைக்குச் செல்ல வேண்டும், எப்போது விடுமுறை எடுக்க வேண்டும் யாரோ ஒருவர் சொல்கிற விதத்தில் என் வாழ்க்கையைக் கழிக்க நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். பணக்காரனாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான் நான் வேலையை விரும்பவில்லை."