Download Free Audio of பணக்காரர்களின் செ... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

பணக்காரர்களின் செல்வ இரகசியம் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய பின், நான் எனது பணக்கார அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வயது இருக்கும். நான் பள்ளியின் மீது மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தேன். பணக்காரனாக இருப்பது குறித்து கற்றுக்கொள்ள நான் விரும்பினேன், "பணம் சம்பாதிக்க 101 வழிகள்" அல்லது "லட்சாதிபதியாய் இருப்பது எப்படி” போன்ற விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்குப் பதில், அறிவியல் வகுப்பில் தவளைகளை நான் அறுத்துக் கொண்டிருக்கக் கண்டேன். மேலும் இந்த இறந்த தவளை எப்படி என்னைப் பணக்காரனாக்கும் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். பள்ளியின் மீது ஏமாற்றமாக உணர்ந்து, நான் என் பணக்கார அப்பாவைக் கேட்டேன் "பள்ளியில் பணத்தைப் பற்றி எங்களுக்கு ஏன் கற்றுத் தரக்கூடாது?" அவர் சிரித்தார், அவர் தனது வேலையிலிருந்து தலையை நிமிர்த்தி, "எனக்குத் தெரியாது. நானும் அதைப் பற்றி ஆச்சரியப்பட்டிருக்கிறேன்". சற்றே இடைவெளிவிட்டு அவர் கேட்டார் "ஏன் கேட்கிறாய்?"