Download Free Audio of எனது பதில் எனது அல�... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

எனது பதில் எனது அலுவலகம் கடிதங்களால் நிறைந்து வழிவதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, எனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பதிலளிக்க எனக்கு நேரம் இருப்பதில்லை. சில சமயம் பிறரிடம் நான் கேட்கும் அதே கேள்விகளையே, இவரும் கேட்டிருப்பதால் நான் இப்புத்தகத்தை அவரின் கடிதத்திலிருந்து துவங்கியிருக்கிறேன். அதோடு அவரது வெளிப்படையான தன்மையும், திறந்த மனதும் என்னைக் கவர்ந்தது. எந்த ஒரு நெட்வொர்க் நிறுவனத்துடனும் இணைந்திருக்கவோ, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் மூலம் என் செல்வ வளத்தை அடைந்திருக்கவோ செய்யாதபொழுது, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலை நான் பரிந்துரைப்பது ஏன் என்று அறிந்துகொள்ள பலர் விரும்பலாம். எனவே எல்லோருக்கும் என் பதிலைத் தெரியப்படுத்தவே இப்புத்தகத்தை நான் எழுதினேன். முடிப்பதற்கு முன், நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் அனைவருக்குமான ஒன்று என நான் நம்பவில்லை என்பதையும் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன். இதை வாசிப்பதால், நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் உங்களுக்குச் சரிப்பட்டு வருமா, வராதா எனத் தெளிவாக அறிய வருவீர்கள் என நான் நினைக்கிறேன். நீங்கள் ஏற்கனவே நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்தால், முன்பே நீங்கள் அறிந்துள்ள, உணர்ந்துள்ள விஷயங்களை இந்தப் புத்தகம் உறுதி செய்வதை நீங்கள் காண்பீர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் செய்வது குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் காணத் தவறுகிற, இத்தொழில் உங்களுக்கு அளிக்கும் வெளித் தெரியாத வாய்ப்புக்களையும் மதிப்பீடுகளையும் நீங்கள் கண்டறிவீர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் வெறுமனே கூடுதலாகப் பணம் சம்பாதிக்கிற வாய்ப்பு மட்டுமல்ல; அதனைவிடவும் அதிகமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதற்காகவும், திறந்த மனதுடையவர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு, நான் முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையுள்ள, ராபர்ட் கியோஸாகி