Read Aloud the Text Content
This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.
Text Content or SSML code:
நன்றி 2001ல் இப்புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியானபோது, அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பு எங்களை நெகிழச் செய்தது. ஆனால் நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறை, 1990களின் நடுப்பகுதியிலிருந்து எங்களது படைப்பை ஏற்றுக் கொண்டுள்ள செயலானது அதைவிட அதிகமாக பிரமிக்க வைக்கும் ஒன்று. ரிச் டாட் அமைப்பின் கொள்கைகளை முன்னோடியாக ஏற்றுக்கொண்டு, அதைப் பிரபலப்படுத்திய நெட்வொர்க் மார்க்கெட்டியர் என்ற முறையில் உங்களுக்கும், உங்களது நெட்வொர்க்கில் உங்களுக்கு மேலே உள்ளவர்களுக்கும் கீழே உள்ளவர்களுக்கும், நீங்கள் தொடர்பு கொண்டுள்ள நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். மக்கள் தங்களது பொருளாதார வாழ்வினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவுவதற்கான பரஸ்பர தேடலில் நாம் இருக்கிறோம். தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொடுங்கள். உங்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக!